சென்னையில், குட்கா கடத்தி வந்ததாக சந்தேகப்பட்டு நடத்திய சோதனையின் போது, கணக்கில் வராத ஹவாலா பணம் 70 லட்சம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இரண்டாவது கடற்கரை சாலையில் சந்தேகத்திற்கு இடமாக நின்றுக் கொண்டிருந்த இரண்டு பேர் குட்கா கடத்ததில் ஈடுபட்டுள்ளார்களோ என்ற சந்தேகத்தில் போலீசார் அவர்களின் அருகே செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.
அப்போது இரண்டு பேரும் தப்பி ஓடிய நிலையில், ஒருவரை பிடித்த போலீசார் அவர் வைத்திருந்த பையை சோதனையிட்டதில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியது.
பிடிபட்ட சகாபுதீன் என்பவரையும், பணத்தையும் போலீசார் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.