பிரதமர் மோடி குறித்து பிபிசி வெளியிட்ட சர்ச்சைக்குரிய ஆவணப்படத்தின் வீடியோக்களை, மத்திய அரசு உத்தரவின்பேரில் யூடியூப், டிவிட்டர் நிறுவனங்கள் முடக்கியுள்ளன.
அண்மையில் பிபிசி வெளியிட்ட 2 அத்தியாயங்களை கொண்ட ஆவணப்படம், குஜராத் கலவரத்தில் பிரதமரை தொடர்புப்படுத்தி இருந்ததாக விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், தகவல் தொழில்நுட்ப விதிகளின் கீழ் அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தி மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், உத்தரவிட்டதை தொடர்ந்து, ஆவணப்படங்கள் குறித்த வீடியோக்கள் முடக்கப்பட்டுள்ளது.