ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பா.ம.க போட்டியிடப் போவதில்லை என்றும் யாருக்கும் ஆதரவும் இல்லை என்றும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இடைத்தேர்தல்கள் தேவையற்றவை, மக்களின் வரிப்பணத்தையும், நேரத்தையும் வீணடிப்பவை என்று கூறியுள்ளார்.
மேலும், ஒரு சட்டமன்ற உறுப்பினர் காலமானால், அங்கு இடைத்தேர்தல் நடத்த தேவையில்லை என்றும் எந்தக்கட்சி வெற்றி பெற்றதோ அதே கட்சியைச் சேர்ந்த ஒருவரை சட்டமன்ற உறுப்பினராக்கிவிடலாம் என்பதே பாமகவின் நிலைப்பாடு என்றும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.