அனுமதியின்றி வாரிசு, துணிவு படங்களின் சிறப்பு காட்சிகளை திரையிட்டதாக, மதுரையில் உள்ள 34 திரையரங்குகளுக்கு, மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
பொங்கலை முன்னிட்டு வெளியான அவ்விரு படங்களையும் ஜன.11,12,13 மற்றும் 18ம் தேதிகளில், காலை 9 மணிக்கு ஒரு சிறப்பு காட்சி திரையிட மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த 11ம் தேதி அனுமதிக்கப்பட்ட நேரத்தை தவிர்த்து கூடுதலாக சிறப்பு காட்சிகளை திரையிட்ட 34 திரையரங்குகள், 15 நாட்களுக்குள் விளக்கமளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ள மதுரை மாவட்ட ஆட்சியர், விளக்கமளிக்காவிடில் தமிழ்நாடு திரையரங்கு ஒழுங்குமுறை சட்டம் 1957ன் கீழ் திரையரங்கின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.