அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில், மூதாட்டி மீது ஆண் பயணி சிறுநீர் கழித்த விவகாரத்தில் டாடாவின் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு 30 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) உத்தரவிட்டது.
பிரச்சனையை கையாள்வதில் ஏர் இந்தியா விதிகளை முறையாக பின்பற்றவில்லை என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுவரையில், எந்த விமான நிறுவனத்திற்கும் இவ்வளவு பெரிய தொகை அபராதமாக விதிக்கப்படவில்லையென கூறப்படுகிறது.
மேலும், தனது கடமைகளை சரிவர நிறைவேற்ற தவறியதாக தலைமை விமானியின் லைசென்ஸை 3 மாதங்களுக்கு நிறுத்தி வைத்ததோடு, ஏர் இந்தியாவின் விமான சேவை இயக்குநருக்கு 3 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து விமானப் போக்குவரத்து இயக்குநரகம் நடவடிக்கை எடுத்தது.