சென்னை திரிசூலத்தில் கட்டிட வேலையில் ஈடுபட்டிருந்த பீகார் மாநில தொழிலாளியின் காலில், துப்பாக்கி தோட்டா பாய்ந்ததில் காயம் அடைந்தார்.
திரிசூலத்தில் சங்கர் என்பவரின் வீடு கட்டுமானப் பணியில் பீகாரைச் சேர்ந்த அஸ்லாம் ஈடுபட்டிருந்த போது திடீரென வலது காலில் காயம் ஏற்பட்டு வலியால் அலறினார்.
உடனடியாக, சக தொழிலாளிகள் அவரை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், காலில் பாய்ந்திருந்த தோட்டாவை அகற்றிய மருத்துவர்கள் இதுகுறித்து பல்லாவரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில், போலீசார் நடத்திய விசாரணையில், அருகிலுள்ள மீனம்பாக்கத்தில் உள்ள சி.ஆர்.பி.எப் வீரர்களின் துப்பாக்கி பயிற்சி மையத்தில் பயிற்சிக்காக பயன்படுத்திய தோட்டா என்பதும், வீரர்கள் அந்த நேரத்தில் பயிற்சியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.