​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மின் கட்டணம் உயரும் என்பது முற்றிலும் தவறான தகவல் - அமைச்சர் செந்தில்பாலாஜி

Published : Jan 20, 2023 2:30 PM

மின் கட்டணம் உயரும் என்பது முற்றிலும் தவறான தகவல் - அமைச்சர் செந்தில்பாலாஜி

Jan 20, 2023 2:30 PM

புதிய மின்சார திருத்த சட்டத்தினால் மாதம் ஒருமுறை மின் கட்டணம் உயரும் என்பது முற்றிலும் தவறான தகவல் என்று மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் விளையாட்டு மேம்பாட்டு அணியின் இரண்டாம் நாள் நேர்காணலை தொடங்கிவைத்த அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நாடாளுமன்ற நிலைக்குழுவில் உள்ள மத்திய அரசின் மின்சார திருத்த சட்ட மசோதா, மின்துறையை தனியார் மயமாக்கும் சட்டமாக உள்ளது என்று கூறினார்.

மேலும், பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்வது போல் மின் கட்டணத்தையும் நிர்ணயம் செய்ய இச்சட்டம் வழிவகுப்பதால் திமுக இதை ஒருபோதும் அனுமதிக்காது என்றும் செந்தில்பாலாஜி கூறினார்.