கொரோனாவின் வீரியம் குறைவாக இருப்பதால் தற்போது தமிழகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை என்றும், வீரியம் அதிகரித்தால் மத்திய அரசு வழிகாட்டுதலின்படி கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூரில் சுகாதார கட்டடங்களை திறந்து வைத்தபின் பேட்டியளித்த அவர், புத்தாண்டு கொண்டாட்டங்களில் எதிர்பாராவிதமாக விபத்துகள் நேரிட்டால் அதனை எதிர்கொள்ள 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணியில் தயாராக உள்ளதாக கூறினார்.