காளான்களை போல வரி ஏய்ப்பு அதிகரித்து வருவதாக அதிருப்தி தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், வரி ஏய்ப்பில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு வணிக வரித்துறை விதித்த விற்பனை வரியை ரத்து செய்யக்கோரி, திருப்பூர் அன்னபூர்ணா ஹோட்டல் நிறுவனம் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் வரி வருவாய் முக்கிய பங்காற்றுவதாகவும் வரி ஏய்ப்பு செய்வதால் நாடு மிகப்பெரிய பிரச்னைகளை சந்திப்பதாகவும் கருத்து தெரிவித்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.