கர்நாடகாவில் முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசு, பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா மீதான 1,700 வழக்குகளை ரத்து செய்ததாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சாடியுள்ளார்.
மாண்டியாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு, சித்தராமையா தலைமையிலான அரசு ஆதரவு அளித்துவந்ததாக விமர்சித்தார்.
அப்படி மன்னித்து விடப்பட்ட சிலரால்தான், பிரவீன் நெட்டாரு கொலை போன்ற வன்முறைச்சம்பவங்கள் நடைபெற்றதாகவும் அவர் குறை கூறினார்.
5 ஆண்டுகளுக்கு அந்த இயக்கத்தை பாஜக அரசு தடை செய்திருப்பதாகவும், இத்தடை நீட்டிக்கப்படும் என்றும் அமித் ஷா தெரிவித்தார்.