சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகித உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது. வரும் ஜனவரி முதல் மார்ச் வரையிலான நிதியாண்டின் சிறுசேமிப்பு திட்டங்கள், தேசிய சேமிப்புப் பத்திரங்கள், மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம் உள்பட பல்வேறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை, மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
அதன்படி, மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டத்திற்கு, இனி 8 சதவீத வட்டியும், தேசிய சேமிப்புப் பத்திரங்களுக்கு 7 சதவீத வட்டியும் கிடைக்கும். இதேபோல், அஞ்சலகங்களில் 1 வருடம் முதல் 5 வருடம் வரையிலான டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்கள்
1 புள்ளி 1 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
தொழிலாளர் வைப்பு நிதியான பிபிஎப், செல்வ மகள் சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதுமில்லை.