தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே, புத்தாண்டை முன்னிட்டு 16 கிலோ எடையுள்ள கருஞ்சிறுத்தை வடிவிலான பிரம்மாண்ட கேக், பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
புதூர் பகுதியில் பேக்கரி நடத்திவரும் சம்பத், கருஞ்சிறுத்தையின் பற்கள், நகம், தத்ரூப உடலமைப்பு என முழுவதும் உண்ணக்கூடிய கேக்கால் பிரத்யேகமாக வடிவமைத்துள்ளார்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வகையிலான இந்த பிரம்மாண்ட கேக், பேக்கரியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக, மயில், ஒட்டக சிவிங்கி, ஸ்டாபெரி, ராயல் என்ஃபீல்டு பைக், கொரில்லா, கேமரா உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் சம்பத் கேக் செய்துள்ளார்.