ரூ 290க்கு பில் கொடுக்கல.. போடு ரூ 20 ஆயிரம் அபராதம்.. வியாபாரிக்கு இப்படி ஒரு ஆப்பா..?
Published : Dec 30, 2022 9:00 PM
ரூ 290க்கு பில் கொடுக்கல.. போடு ரூ 20 ஆயிரம் அபராதம்.. வியாபாரிக்கு இப்படி ஒரு ஆப்பா..?
Dec 30, 2022 9:00 PM
வாணியம்பாடியில், ஜி.எஸ்.டி பில் இல்லாமல் விற்கப்பட்ட 290 ரூபாய் பொருட்களுக்கு , 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த எலக்ட்ரிகல் கடை உரிமையாளர் வணிகவரி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
வாணியம்பாடியில் வெங்கடேசன் என்பவரது எலக்ட்ரிக்கல் கடைக்கு பொருட்கள் வாங்குவது போல சென்ற வணிக வரித்துறை அதிகாரிகள், 290 ரூபாய்க்கு பொருட்களை வாங்கிக் கொண்டு பில் கேட்டுள்ளனர்.
கொட்டேஷன் பேடில், 290 ரூபாய் என எழுதி வெங்கடேசன் பணம் கேட்ட நிலையில், ஜி.எஸ்.டி பில் இல்லாமல் பொருட்களை விற்பதாக கூறி அதிகாரிகள் 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.
இதனால், ஆத்திரமடைந்த வியாபாரி வெங்கடேசன், தான் கொட்டேஷன் மட்டுமே கொடுத்ததாகவும், பொருட்களுக்கான பணத்தை தான் வாங்கி இருந்தால் தான், ஜிஎஸ்டி பில் வழங்க முடியும் என்று கூறி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
தங்களிடம் சிக்கிக் கொண்டதை மறைப்பதற்காக வியாபாரி இவ்வாறு சத்தம்மிடுவதாக கூறிய அதிகாரிகள், அபராதத்தை கட்டியே ஆக வேண்டுமென கூறிச்சென்ற நிலையில் வெங்கடேசன் அபராத தொகையை செலுத்தியதாக கூறப்படுகின்றது.