​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உத்தரகாண்ட் மாநிலத்தில் நேரிட்ட கார் விபத்தில் ரிஷப் பந்த் காயம்

Published : Dec 30, 2022 12:24 PM

உத்தரகாண்ட் மாநிலத்தில் நேரிட்ட கார் விபத்தில் ரிஷப் பந்த் காயம்

Dec 30, 2022 12:24 PM

உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கி அருகே இன்று அதிகாலை நேரிட்ட விபத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் காயமடைந்தார்.

உத்தரகாண்டில் இருந்து டெல்லிக்கு  காரில் சென்றுகொண்டிருந்தபோது தூக்கக் கலக்கத்தில் அதிகாலை 5.30 மணிக்கு இந்த விபத்து நிகழ்ந்ததாகவும், காரை ரிஷப் பண்ட் ஓட்டிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

காரில் ரிஷப் பண்ட் மட்டுமே இருந்ததாகவும், கார் தீப்பிடித்ததும் கண்ணாடியை உடைத்து வெளியேறியதாகவும் உத்தரகாண்ட் காவல்துறை இயக்குநர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தில் ரிஷப் பண்டுக்கு தலை, முழங்கால் மற்றும் முதுகில் காயம் ஏற்பட்டிருப்பதாகவும், காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து அவர் டேராடூனில் உள்ள  மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தின் காட்சிகள் சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது.