வாட்ஸ் ஆப்பில் பயனர்களின் சாட்டிங் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக "டிஜிட்டல் அவதார்"அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சமூக வலைத்தளமான வாட்ஸ் ஆப், பயனர்களை கவரும் வகையில் எமோஜி, ஸ்டிக்கர்கள் உள்ளிட்ட அப்டேட்டுகளை வழங்கி வருகிறது.
அந்த வகையில்,விரைவில் கொண்டுவரப்படவுள்ள டிஜிட்டல் அவதார் மூலம் பயனர்கள் பலவித ஹேர் ஸ்டைல், முக அம்சங்கள் உள்ளிட்ட காம்பினேஷன்களில் தங்களது தனிப்பட்ட ஸ்டிக்கர்களை உருவாக்கி, அவற்றை சாட்டிங்-கில் பயன்படுத்த முடியும்.
மேலும், இந்த டிஜிட்டல் அவதார்களை புரொஃபைல் ஃபோட்டோவாகவும் பயன்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.