கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே வனப்பகுதியில் தஞ்சம் அடைந்த 50 காட்டு யானைகளை வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டி அடித்தனர்.
ஊடேதுர்கம் வனப்பகுதியில் இருந்து நேற்று காலை 50 காட்டு யானைகள் வெளியேறி சாணமாவு வனப்பகுதிக்கு வந்தன.
இந்த யானைகளை ஓசூர் வன சரக அலுவலர் தலைமையில் 40 பேர் கொண்ட குழுவினர் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக யானைக் கூட்டம் ரயில் தண்டவாளத்தை கடந்து ஊடே துர்காம் காட்டுக்கு சென்றதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் நிம்மதியடைந்தனர்.