ஆந்திராவில் இருந்து சென்னை சென்டிரல் ரயில் நிலையம் வந்த பயணியிடம் 40 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் மற்றும் வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவினருடன், ரயில்வே பாதுகாப்பு படையினர் இணைந்து, ரயில் பயணிகளிடம் சோதனை நடத்தினர்.
அப்போது, ஷிவமொக்கா விரைவு ரயிலில் வந்த கோபால் என்ற பயணியிடம் பணம், சேதமான வைர நகைகள் கண்டறியப்பட்ட நிலையில், அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டது.
இதனை அடுத்து, கோபாலிடம் ஆர்.பி.எஃப். போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.