அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் இருந்த காலத்தில், அவரது தொழில் நிறுவனங்கள் வரிமோசடியில் ஈடுபட்டதை, நியூயார்க் நீதிமன்றம் உறுதி செய்து, தீர்ப்பளித்துள்ளது.
தி டிரம்ப் ஆர்கனைசேஷன் (The Trump Organization) மற்றும் ட்ரம்ப் பேரோல் கார்ப் (Trump Payroll Corp) ஆகிய இரு நிறுவனங்கள், அந்நிறுவனத்தின் முக்கிய உயரதிகாரிகளுக்கு, ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான இலவச வாடகை மற்றும் கார் குத்தகை தொகையை செலுத்தியது, வருமானத்தை பற்றி தெரிவிக்காமல் மறைத்தது போன்ற குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
2024ம் ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக டிரம்ப் அறிவித்திருந்த நிலையில், அவரது நிறுவனங்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டிருப்பது, டிரம்பிற்கு பின்னடைவை ஏற்படுத்தலாம் என அமெரிக்க நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன.