திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் மீது பெட்ரோல் வெடிகுண்டு வீசிய சம்பவத்தில் சிறுவன் உள்பட 2பேர் கைது செய்யப்பட்டனர்.
பழவேற்காடு பெரிய தெருவில் வசித்து வரும் மகிமை ராஜ் என்பவரது வீட்டின் முன்பு கடந்த 30ந்தேதி நள்ளிரவில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி விட்டு தப்பிச் சென்றனர்.
இதில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் தீப்பிடித்து எரிந்து நாசமானது. இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு 2பேரை கைது செய்தனர்.