மகாராஷ்ட்ராவில் ஷிண்டே தலைமையில் அமைக்கப்பட்ட அரசு அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.
இப்பிரச்சினை தொடர்பாக இருதரப்பினரும் தாக்கல் செய்த மனுக்களை அவசர கால வழக்காக விசாரிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமான அரசு நீடிக்கக்கூடாது என்று வழக்கை விரைவாக விசாரிக்க தாக்கரே தரப்பில் வழக்கறிஞர் கூறிய போது, ஒரு வாரத்திற்குள் 5 நீதிபதிகள் அமர்வு நியமிக்க முடியாது என்பதாலும் அதன் பின்னர் உச்சநீதிமன்றத்திற்கு குளிர்கால விடுமுறை இருப்பதையும் சுட்டிக் காட்டி இவ்வழக்கை ஜனவரி 13ம் தேதி வரை நீதிபதிகள் ஒத்தி வைத்துள்ளனர்