​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று தொடக்கம்.. 16 புதிய மசோதாக்கள், 8 நிலுவை மசோதாக்கள் நிறைவேற்ற திட்டம்!

Published : Dec 07, 2022 6:09 AM

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று தொடக்கம்.. 16 புதிய மசோதாக்கள், 8 நிலுவை மசோதாக்கள் நிறைவேற்ற திட்டம்!

Dec 07, 2022 6:09 AM

 நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இக்கூட்டத் தொடரில் 16 புதிய மசோதாக்கள் உள்பட 25 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்கி இம்மாதம் 29ந் தேதி வரை 17 அமர்வுகளாக நடைபெற உள்ளது. இதையொட்டி நேற்று மாலை நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் 30 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். அப்போது பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங், அவை நடவடிக்கைகள் சுமுகமாக நடைபெற எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பை நாடினார்.

வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம், சீனாவுடனான எல்லைப் பிரச்சினை, மத்திய அரசின் புலனாய்வு ஏஜன்சிகள் தவறாகப் பயன்படுத்தப்படுவது உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

இதனிடையே, நாடாளுமன்ற அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் நடைபெற்றது. கூட்டத் தொடரை இடையூறு ஏதுமின்றி சுமுகமாக நடத்தித் தருமாறு அனைத்துக் கட்சிகளையும் அவர் கேட்டுக் கொண்டார்.

இத்தொடரில் 16 புதிய மசோதாக்களை அறிமுகப்படுத்துவதுடன், நிலுவையில் உள்ள 8 சட்ட மசோதாக்களையும் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மகளிருக்கு மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்திருத்த மசோதா மீண்டும் இக்கூட்டத் தொடரில் கொண்டு வரப்பட வாய்ப்புள்ளது.