இந்தோனேஷியாவில், திருமணத்திற்கு முன் பாலியல் உறவில் ஈடுபடுவோருக்கும், திருமணம் தாண்டிய பாலியல் உறவில் ஈடுபடுவோருக்கும் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பாலி உள்ளிட்ட சுற்றுலா தளங்களுக்கு வரும் திருமணமாகாத வெளிநாட்டு ஜோடிகளுக்கும் இந்த சட்டங்கள் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல், லிவிங் டுகெதராக இருப்போருக்கும் 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தொடர் போராட்டங்களால் 3 ஆண்டுகளாக கிடப்பிலிருந்த சட்ட மசோதா தற்போது நாடாளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடவுள் மறுப்பும், அதிபரை கடுமையாக விமர்சிப்பதும் கிரிமினல் குற்றங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த சட்டங்கள் முழுமையாக அமலுக்கு வர 3 ஆண்டுகள் ஆகும் என கூறப்படுகிறது.