அமெரிக்காவில் பத்திரிகை மசோதாவை நிறைவேற்றினால், முகநூலில் செய்தி வெளியிடுவதை முழுமையாக நிறுத்தி விடுவோம் என்று மெட்டா நிறுவனம் மிரட்டல் விடுத்துள்ளது.
முகநூல் கணக்குகளில் செய்திகளை பகிர்வது அதன் வருவாயில் ஒரு பகுதிமட்டுமே என மெட்டா நிறுவன உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் 2021 -இல் ஆஸ்திரேலியாவில் இது போன்ற சட்டம் அறிமுகம் ஆனதும் செய்தி நிறுத்தப்பட்டது, பின்னர் மெட்டா நிறுவனம் அந்த நாட்டு அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு தனது முடிவை மாற்றியது.
இந்தச் சட்டம் நிறைவேற்றப்படாவிட்டால் சமூக ஊடகங்கள் அமெரிக்காவின் உண்மையான உள்ளூர் செய்தித்தாள்களாக மாறும் என்று அதன் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
அதேவேளை ஊடகங்கள் மெட்டாவால் உயிருடன் உண்ணப்படுவதாக அமெரிக்கப் பொருளாதார சுதந்திரத் திட்டத்தின் ஆராய்ச்சி இயக்குநர் மாட் ஸ்டோலர் விமர்சித்துள்ளார்.