தமிழகத்தில் உள்ள மதுக்கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்த 852 மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்களிடமிருந்து 4 கோடியே 61 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்க துணை நின்ற ஆயிரத்து 970 மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களையும் பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும். தகவல் வெளியாகியுள்ளது.