சர்வதேச அளவில் செயல்பட்டு வரும் மனித உரிமை அமைப்பான அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பின் கணினியில், சீனாவின் ஹேக்கர்கள் நுழைந்து தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஏற்கனவே, கடந்த அக்டோபர் 5ம் தேதி அம்னெஸ்டியின் கணினிகளில் ஹேக்கர்கள் சீனா, ஹாங்காங் தொடர்பான தகவல்களை தேடியதால், சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் நியமிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக, அந்த அமைப்பின் கனடா பிரிவு பொதுச்செயலாளர் கெட்டி நிவ்யபன்டி தெரிவித்தார்.
சீனாவில், உய்குர் மற்றும் பிற இன சிறுபான்மையினருக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் பிரச்சனையில் அம்னெஸ்டி தீவிரமாக செயல்படுவதால் சீனாவின் உதவியுடன் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கெட்டி தெரிவித்துள்ளார்.