​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காற்று மாசை குறைக்கும் நடவடிக்கையாக டெல்லியில் பிஎஸ் 3 ரக பெட்ரோல், பிஎஸ் 4 ரக டீசல் கார்களை இயக்க தடை..!

Published : Dec 06, 2022 3:34 PM

காற்று மாசை குறைக்கும் நடவடிக்கையாக டெல்லியில் பிஎஸ் 3 ரக பெட்ரோல், பிஎஸ் 4 ரக டீசல் கார்களை இயக்க தடை..!

Dec 06, 2022 3:34 PM

டெல்லியில், வரும் 9-ஆம் தேதி வரை, பிஎஸ் 3 ரக பெட்ரோல் மற்றும் பிஎஸ் 4 ரக டீசல் கார்களை இயக்க தடை விதித்த மாநில அரசு, தடையை மீறுவோருக்கு இருபதாயிரம் ரூபாய் அபராதம் விதிக்க உத்தரவிட்டுள்ளது.

கடந்த 4-ஆம் தேதி, டெல்லியில் காற்றின் தரக்குறியீடு 407 என்ற அளவில் மோசமடைந்ததை அடுத்து, அதனை கட்டுப்படுத்த மத்திய நிபுணர் குழு புதிய செயல்திட்டத்தை அறிவித்தது.

(GRAP III)தொடர்ந்து, மோட்டார் வாகன சட்டம் 115-ன் படி, அவசரகால சேவை, அரசு அல்லது தேர்தல் பணிக்கான வாகனங்கள் தவிர்த்து, இலகுரக பிஎஸ் 3 ரக பெட்ரோல் மற்றும் பிஎஸ் 4 ரக டீசல் கார்களை இயக்க அரசு விதித்த தடை நேற்று முதல் அமலானது.