நாளை முதல், அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் 5,000 க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளதாக, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.
தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை முன்கூட்டியே முகாம்களில் தங்கவைத்து, உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தருமாறு, மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், 10 கடலோர மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், சென்னையில் தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழை நீரை வெளியேற்ற 800 நீர் இறைப்பான்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.