தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைக் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்று, நாளை மாலை புயலாக வலுவடையக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழக கடலோர பகுதிகளை ஒட்டி நிலவக்கூடும் என்பதால், வரும் 8ம் தேதி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உட்பட 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது.
வரும் 9ம் தேதி சென்னை, டெல்டா மாவட்டங்கள் உட்பட 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகனமழையும், 10ம் தேதி சென்னை உட்பட 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கணித்துள்ளது.