போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக கூறி வீட்டின் எதிரே இருந்த கடைகளை சூறையாடிய பெண் மருத்துவர்..
Published : Oct 25, 2022 10:20 PM
போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக கூறி வீட்டின் எதிரே இருந்த கடைகளை சூறையாடிய பெண் மருத்துவர்..
Oct 25, 2022 10:20 PM
உத்தரபிரதேசத்தி'ல், தனது வீட்டின் முன் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக கூறி, சாலையோர கடைகளில் இருந்த மண் பானைகள் மற்றும் விளக்குகளை, கிரிக்கெட் பேட் கொண்டு உடைத்த பெண் மருத்துவர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
லக்னோவின் கோம்தி நகரில், வீட்டின் எதிரே சாலையில் உள்ள கடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் ஆத்தமடைந்த பெண் மருத்துவர், கடைகள் மீது தாக்குதல் நடத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.
வீட்டின் முன் உள்ள கடைகளை அகற்ற பலமுறை தான் கோரிக்கை விடுத்ததாகவும், தொடர்ந்து கடைக்காரர்கள், போக்குவரத்து தடையை ஏற்படுத்தியதாகவும் பெண் மருத்துவர் விளக்கமளித்துள்ளார்.