இராமநாதபுரம் மாவட்டம் தேர்த்தங்கல் கிராம மக்கள், பறவைகளுக்காக கடந்த 13 வருடங்களாக பட்டாசு வெடிக்காமல் தீபாவளி கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
அங்கு 70 ஏக்கர் பரப்பரளவில் அமைந்துள்ள பறவைகள் சரணாலயத்திற்கு, பல்வேறு நாடுகளில் இருந்து கூழைக்கடா, கரண்டி வாயன் உள்ளிட்ட ஏராளமான பறவைகள் ஆண்டு தோறும் வந்து செல்கின்றன.
இனப்பெருக்கம் செய்ய வரும் பறவைகளுக்கு அச்ச உணர்வை ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக பட்டாசு வெடிப்பதை தேர்த்தங்கல் கிராம மக்கள் 13 ஆண்டுகளாக கைவிட்டு உள்ளனர்.