தீபாவளியை முன்னிட்டு அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் இந்திய அமெரிக்கர்களுக்கு விருந்தளித்தார்.
வாஷிங்டனில் உள்ள கடற்படை கண்காணிப்பு இல்லத்தில் நேற்று மாலை நடைபெற்ற விருந்தில் அதிபர் ஜோ பைடனின் மூத்த ஆலோசகரும் இந்திய வம்சாவளியினருமான நீரா டான்டன் மற்றும் இந்தியாவுக்கான அமெரிக்க முன்னாள் தூதர் ஆகியோரும் கலந்துகொண்டார்.
இந்துக்கள், ஜெயின்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள் உள்ளிட்ட இந்திய-அமெரிக்கர்களும் கமலா ஹாரிஸ் அளித்த தீபாவளி விருந்தில் கலந்துகொண்டனர்.