தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இந்திய கடற்படை அதிகாரிகள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வேதாரண்யம் மரைன் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நேற்று நள்ளிரவு நாகை துறைமுகத்தில், படகையும், மீனவர்கள் 9 பேரையும், மரைன் போலீசாரிடம், கடற்படையினர் ஒப்படைத்தனர். விசாரணையில்,
9 மீனவர்களையும் கடற்படையினர் இரும்பு ராடால் தாக்கியதாகவும், சுமார் 18 மணி நேரம் உணவு, குடிநீர் வழங்காமல் கொடுமைப்படுத்தியதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து கடற்படை அதிகாரிகள் மீது படகின் உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் மரைன் போலீசார் வழக்கு பதிந்தனர்.