திருச்சி விமான நிலைய சுற்றுச்சுவர் மீது தக்காளி லோடு ஏற்றி வந்த லாரி மோதிய விபத்தில், சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்து பழுதான சிக்னல் கருவிகளை சரி செய்யும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.
அதிகாலை 3.50 மணியளவில் ஓசூரில் இருந்து அறந்தாங்கிக்கு சென்ற லாரி, பின்னால் வந்த லாரிக்கு வழி விடுவதற்கு இடதுபுறம் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்து சுற்றுச்சுவர் மீது மோதியது .