தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகிற செவ்வாய் கிழமை அன்று புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தை போல் புதுச்சேரியிலும் ஆன்லைன் ரம்மி தடை செய்ய கோப்புகள் தயார் செய்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.