​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஒரே ராக்கெட் மூலம் 36 செயற்கைகோள்களை விண்ணில் ஏவுகிறது இஸ்ரோ..

Published : Oct 22, 2022 8:19 AM

ஒரே ராக்கெட் மூலம் 36 செயற்கைகோள்களை விண்ணில் ஏவுகிறது இஸ்ரோ..

Oct 22, 2022 8:19 AM

ஒரே ராக்கெட் மூலம் 36 செயற்கைகோள்களை விண்ணில் ஏவுகிறது இஸ்ரோ.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் 36 செயற்கைகோள்களை நள்ளிரவில் விண்ணில் ஏவ உள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட உள்ள இந்த ராக்கெட் 640 டன் எடை கொண்டது.

வணிக ஏவுதல் மூலம் முதல் முறையாக இந்திய ராக்கெட் சுமார் 6 டன் எடையுள்ள செயற்கைகோள்களை சுமந்து செல்கிறது. குறைந்த புவி சுற்றுப்பாதையில் இந்த செயற்கைகோள்கள் நிலை நிறுத்தப்பட உள்ளன. இந்த ராக்கெட்டை ஏவுவதற்கான 24 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று நள்ளிரவு 12.07 மணிக்கு தொடங்கியது.