பாரீசில் நடைபெற்ற FATF எனப்படும் தீவிரவாத நிதிக் கண்காணிப்பு அமைப்பின் கூட்டத்தில் பாகிஸ்தான் மீதான பொருளாதாரக் கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்டன.
தீவிரவாதிகளுக்கு நிதியளித்த காரணத்தால் பாகிஸ்தான் கிரே பட்டியலில் வைக்கப்பட்டிருந்தது. அண்மையில் தீவிரவாத இயக்கங்கள் மீது சில நடவடிக்கைகளை பாகிஸ்தான் மேற்கொண்டதால் கிரே பட்டியலில் இருந்து பாகிஸ்தானுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்தியா சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்ச்சி, தீவிரவாதத்திற்கு எதிராக கடுமையான வெளிப்படையான நடவடிக்கையை பாகிஸ்தான் எடுக்க வேண்டும் என்று உலக நாடுகள் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.