தீபாவளியை முன்னிட்டு இல்லங்களில் சுபிட்சத்தை ஏற்படுத்துவதாகக் கருதப்படும் தன்தேரஸ் பண்டிகை இன்று நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது.
மக்கள் இந்நன்னாளில் தங்கம் வெள்ளி நகைகள், ஆடை ஆபரணங்கள், மின்னணு சாதனங்கள் போன்ற விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதன் மூலம் தங்கள் இல்லங்களில் செல்வமும் சுபிட்சமும் பெருகும் என்று நம்புகிறார்கள்.
இதனால் தன்தேரஸ் நாட்களில் நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதுவது வழக்கம். இன்றைய தினத்தில் பாத்திரங்களில் அரிசி கோதுமை போன்றவற்றை நிரப்பி வைப்பதன் மூலம் அன்னத்துக்கு பஞ்சமிருக்காது என்றும் கருதப்படுகிறது.