​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழ்நாட்டில் 40-50 கோடி ரூபாய்க்கு துணைவேந்தர் பதவி விலை போனதாக, முன்னாள் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பரபரப்பு குற்றச்சாட்டு

Published : Oct 22, 2022 6:33 AM

தமிழ்நாட்டில் 40-50 கோடி ரூபாய்க்கு துணைவேந்தர் பதவி விலை போனதாக, முன்னாள் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பரபரப்பு குற்றச்சாட்டு

Oct 22, 2022 6:33 AM

தமிழக ஆளுநராக தாம் பொறுப்பு வகித்த போது துணைவேந்தர் பதவி 40 முதல் 50 கோடி ரூபாய் வரை விலை போனதாக பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.

சண்டிகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பஞ்சாப் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவிகள் நியமனத்தில் தாம் தலையிடுவதாக வந்த புகார்களை மறுத்தார்.

நான்கு ஆண்டுகள் தாம் தமிழ்நாட்டு ஆளுநராக இருந்ததாகவும் அங்கு நிலைமை மிகவும் மோசமாக இருந்தது என்றும் புரோகித் கூறியுள்ளார். சட்டப்படி தாம் 27 துணைவேந்தர்களை நியமித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.