​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான மீட்பு மையத்தில் தீபாவளியை கொண்டாடிய மாநகராட்சி அதிகாரிகள்..!

Published : Oct 22, 2022 6:31 AM

ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான மீட்பு மையத்தில் தீபாவளியை கொண்டாடிய மாநகராட்சி அதிகாரிகள்..!

Oct 22, 2022 6:31 AM

நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்டு வரும் ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான மீட்பு மையத்தில் அங்கிருக்கும் மனநலம் குன்றியோரால் தயாரிக்கப்பட்ட விதவிதமான இனிப்பு காரவகைகள் உடன் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாநகராட்சி அதிகாரிகள் பாடல் பாடி பட்டாசு வெடித்து புது துணி வழங்கி ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்களுடன் தீபாவளியை கொண்டாடினர்.