ரஷ்ய கட்டுப்பாட்டிலுள்ள “கெர்சன்” மாகாணத்தை மீண்டும் கைப்பற்ற, உக்ரைன் படைகள் கடுமையாகப் போராடிவரும் வேளையில், அங்குள்ள நோவா கக்கோவா அணையை ரஷ்யா வெடி வைத்து தகர்க்கத் திட்டமிட்டுள்ளதாக, அதிபர் செலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.
அணை தகர்க்கப்படும் பட்சத்தில், பல உக்ரைனிய மாகாணங்கள் வெள்ளக்காடாக மாறும் அபாயம் உள்ளதால், அந்த முயற்சியை கைவிடும்படி, ரஷ்யாவை எச்சரிக்குமாறு, மேற்கத்திய நாடுகளுக்கு அதிபர் செலன்ஸ்கி கோரிக்கை விடுத்துள்ளார்.