ரஷ்யாவின் அண்டைநாடான போலந்து வான் எல்லையில், நேட்டோ நாடுகளின் போர் விமானங்கள் பறந்து சென்றன.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலால், நேட்டோ நாடுகளின் கிழக்குக் பகுதியில் வான் மற்றும் ஏவுகணை பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அதன் ஒரு பகுதியாக, போலந்து வான் எல்லையில் நேட்டோ நாடுகளான இத்தாலியின் யூரோ ஃபைட்டர்கள், அமெரிக்காவின் எஃப்-22, போலந்தின் எஃப்-16 மற்றும் மிக்-29 போர் விமானங்கள் வானில் பறந்த சென்றன.