விண்வெளி நிலையத்தில் இருந்து சீன வீரர்கள் எடுத்த புகைப்படத்தை, அந்நாட்டு விண்வெளி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
கிழக்கு கடற்கரைப் பகுதியில் உள்ள நகரங்கள், சாண்டோங் மாகாணம் வழியே போஹாய் கடலில் பாயும் மஞ்சள் நதி, தென்மேற்கு திபெத், தைஹு ஏரி ஆகிய புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
6 மாத பயணமாக கடந்த ஜூன் மாதம் 5-ம் தேதி விண்வெளிக்கு அனுப்பப்பட்ட சீனாவை சேர்ந்த 3 விண்வெளி வீரர்கள் இந்த புகைப்படங்களை எடுத்துள்ளனர்.