மது அருந்திவிட்டு வீட்டிற்கு செல்வோர், சொந்த வாகனங்களை பயன்படுத்தாமல், ஓலா, உபேர், ரேபிடோ போன்ற வாடகை வாகனங்களை பயன்படுத்துமாறு, சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கபில் குமார் அறிவுறுத்தியுள்ளார்.
இது குறித்து பேட்டியளித்த அவர், டாஸ்மாக் கடைகளுக்கு அருகே, குடிபோதை வாகன ஓட்டிகளை பிடிப்பதில் தவறில்லை என்றும், முடிந்தால் டாஸ்மாக் வாசலிலேயே நின்று, குடித்துவிட்டு வாகனம் எடுப்பவரை, போலீசார் பிடிக்க வேண்டும் என்றும் கூறினார்.
மதுக்கடை நடத்தும் அரசு, குடித்துவிட்டு வாகனம் ஓட்ட வேண்டும் என சொல்லவில்லை என்றும் கபில் குமார் தெரிவித்துள்ளார்.