புதிய வகை அக்னி பிரைம் நீண்ட தூர ஏவுகணையை இந்திய விஞ்ஞானிகள் வெற்றிகரமாக பரிசோதித்துள்ளனர். ஓடிசா கடற்பகுதியில் நடந்த இந்த சோதனையில் இலக்கை, துல்லியமான ஏவுகணை தாக்கி அழித்ததாக, பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
தொடர்ந்து 3வது முறையாக வெற்றிகரமான நடைபெற்ற சோதனையின் மூலம், அக்னி பிரைம் ஏவுகணையின் துல்லியத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
டி.ஆர்.டி.ஓ. அமைப்பு உருவாக்கிய இந்த ஏவுகணை, அக்னி ரக ஏவுகணைகளில் மேம்படுத்தப்பட்டதாகும்.