உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் டெங்குக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு, ரத்த பிளேட்லெட்டுகளுக்கு பதிலாக, பழச்சாறு ஏற்றியதாக தனியார் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது.
32 வயதான நோயாளியின் ரத்தத்தில் பிளேட்லெட் எண்ணிக்கை குறைந்ததால், அவருக்கு மருத்துவமனையில், பிளேட்லெட் ஏற்றப்பட்டுள்ளது.
அதன் பிறகு நோயாளி உடல்நிலை மோசமடைந்த நிலையில், வேறொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பிளேட்லெட்டுக்கு பதில், சாத்துக்குடி ஜூஸ் ஏற்றியதால் நோயாளி உயிரிழந்ததாக வீடியோ எடுத்து வெளியிட்ட உறவினர்கள், போலீசிலும் புகாரளித்தனர்.
இதனையடுத்து அம்மருத்துவமனைக்கு சீல் வைக்க, உத்தரபிரதேச துணை முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.