விதிகளை மீறியும், சட்டத்திற்கு புறம்பாகவும் செயல்பட்டதாகக் கூறி கூகுள் நிறுவனத்திற்கு வணிகப் போட்டி ஒழுங்கமைப்பு ஆணையம் ஆயிரத்து 338 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
மேலும், குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் அந்நிறுவனம் தனது நடவடிக்கைகளை மாற்றியமைக்குமாறும், நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை நிறுத்தி கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளது.
ஆண்ட்ராய்டு மொபைல் சாதன அமைப்பில் தனது ஆதிக்கத்தை தவறாக பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.