​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சந்திரயான்-3 விண்கலம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ இயக்குநர் தகவல்..!

Published : Oct 21, 2022 6:53 AM

சந்திரயான்-3 விண்கலம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ இயக்குநர் தகவல்..!

Oct 21, 2022 6:53 AM

நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3  விண்கலம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் விண்ணில் செலுத்தப்படும்  என்று இஸ்ரோ இயக்குநர் சோம்நாத் தெரிவித்தார்.

பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சந்திரயான்-2 வில் ஏற்பட்ட  பிரச்னைகள் இதில் இருக்காது என்றும் அதை விட இன்னும் வலுவானதாக உருவாக்கி இருப்பதாகவும் கூறினார்.

இந்த விண்கலத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்று கூறிய சோம்நாத்,  ஒரு கருவி பழுதடைந்தால் மற்றொரு கருவி அந்த பணியை முன்னெடுத்து செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.