காரைக்காலில் புதிதாக கட்டப்பட்ட நேரு மார்க்கெட்டில் அனுமதியின்றி கடை வைத்ததாக கூறி 20-க்கும் மேற்பட்ட கடைகளை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.
10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருநள்ளாறு வீதியில் நேரு மார்க்கெட் வளாகம் கட்டப்பட்டு பயன்பாட்டிற்காக திறந்து விடப்பட்டது.
இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு மார்க்கெட்டில் அனுமதியின்றி செயல்பட்ட கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
புதுச்சேரி முதல்வர்-மாவட்ட ஆட்சியர் அனுமதியுடன் கடை வைத்திருந்ததாக தெரிவித்த வியாபாரிகள், நகராட்சி ஆணையர் தன்னிச்சையாக செயல்படுவதாக குற்றம்சாட்டினர்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குவிந்த ஏராளாமான வியாபாரிகள், மார்க்கெட் வளாகத்தில் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை என புகார் தெரிவித்தனர்.