தீபாவளியை முன்னிட்டு சென்னையில் 18,000 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
மக்கள் அதிகம் கூடும் தியாகராய நகர், புரசைவாக்கம், பூக்கடை, வண்ணாரப்பேட்டை ஆகிய பகுதிகளில் கண்காணிப்பு கோபுரங்கள், கூடுதலாக 50 சிசிடிவி கேமராக்கள், டிரோன் கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
ஏற்கனவே குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை அடையாளம் காட்டும் Face Recognition System என்ற கண்காணிப்பு செயலி மூலமாகவும், பொதுமக்களை போல் சாதரண உடையணிந்தும் போலீசார் கண்காணித்துவருகின்றனர்.