தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் கனமழையால் நேரிட்ட வெள்ளத்தில் பாலம் மூழ்கியதை அடுத்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஓட்டப்பிடாரம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால், பல்வேறு இடங்களில் மழை நீர் சூழ்ந்தது. மேலும், பசுவந்தனையில் இருந்து கோவில்பட்டி செல்லும் சாலையில் குறுகிய பாலம் நீரில் மூழ்கியது.